Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கனவு அணியை அறிவித்த ஐசிசி… இந்திய வீரர்களில் யாருக்கு இடம்?

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (11:49 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல், வருண் சக்ரவர்த்தி, ஷமி என எனப் பலரும் சிறப்பாக பங்காற்றினார். கடைசி போட்டியில் ரோஹித் ஷர்மா சிறப்பாக அடி அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்நிலையில் ஐசிசி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட ஒரு கனவு அணியை உருவாக்கியுள்ளது அந்த அணியில் இந்திய அணியின் கோலி உள்ளிட்ட ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி கனவு அணி
ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் சத்ரான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (கீப்பர்), க்ளென் பிளிப்ஸ், அஸ்மதுல்ல ஓமர்சாய், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), முகமது ஷமி, மேட் ஹெண்ட்றி, வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல்.. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள்.. குஜராத்தை வீழ்த்திய மும்பை..!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 வித விளம்பரங்களுக்கு தடை.. அதிரடி அறிவிப்பு..!

சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. ரூ. 5000 கோடிக்கு சூதாட்டம்.. அதிர்ச்சி தகவல்..!

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments