Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்காது - தோனி காட்டம் [வீடியோ]

Webdunia
வியாழன், 24 மார்ச் 2016 (13:39 IST)
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது இந்தியாவின் ரன்ரேட் குறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்காது என்று காட்டமாக பதிலளித்தார்.
 

 
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 10 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிக பட்சமாக சுரேஷ் ரெய்னா [30], ரோஹித் சர்மா [28] ரன்கள் எடுத்தனர்.
 
பின்னர் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து. இதன் மூலம் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நிருபர் ஒருவர், ”இந்திய அணியின் நெட் ரன்ரேட் [Net Runrate] குறைவாக இருக்கிறது. நாம் இன்னும் ரன்ரேட்டை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். ஆனால், நீங்கள் அரிதான் வெற்றியை பெற்றுள்ளீர். இதை வைத்து  நீங்கள் எப்படி மகிழ்ச்சியடைய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
 
அப்போது தோனி, ”நான் இதற்கு பதில் சொல்லியாக ஆக வேண்டும். இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை” என்றார்.
 
மேற்கொண்டு பத்திரிக்கையாளர் பேச முற்பட்டபோது, “ஒரு நிமிஷம். நான் சொல்வதை கேளுங்கள்.. நீங்கள் என்னிடம் பேசும் தொனியும், கேள்வியும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை” என்று தோனி காட்டமாக கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், “நாம் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி பேசுவோம். நாம் டாஸை இழந்து விட்ட பிறகு, எப்படி விளையாட முடியும் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த காரணத்தாலும், பெரிய அளவிலான ஸ்கோரை நாம் எடுக்க முடியவில்லை.
 
நீங்கள் வெளியில் உட்கார்ந்து கொண்டு இதைப் பற்றியெல்லாம் அலசி பார்க்காமல், இதுபோன்ற கேள்வியை கேட்கக் கூடாது” என்று கோபமாக பதிலளித்தார்.

வீடியோ கீழே:
 

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

இதுக்காடா இந்த ஆட்டம் போட்டிங்க.. ஆர்சிபி தோல்வியை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கான்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Show comments