Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியே போனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் மறைந்துவிடும் - வக்கார் யூனிஸ் கவலை

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (12:28 IST)
இப்படியே தொடர்ந்து போனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் மறைந்துவிடும் என்று முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “சர்வதேச போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாமல் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே போனால் நமது கிரிக்கெட் மறைந்துவிடும் என நான் நினைக்கிறேன்.
 
ஜூனியர் அளவிலான நமது வீரர்களின் திறமை மங்கி, பிறகு வெளியில் பிரகாசிக்காமல் அழிந்ந்து போய் விடும். சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் பாகிஸ்தானுக்குக் கொண்டு வர முயல வேண்டும். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும் உதவ முன்வர வேண்டும்.
 
பாகிஸ்தானில் கிரிக்கெட்டை நாம் காப்பாற்றியாக வேண்டுமெனில், நாம் உள்நாட்டுப் போட்டிகளை உயர்த்த வேண்டும். எனெனில் அதற்கும் உலக கோப்பை தரத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நாம் மற்ற அணிகளின் பின்னால் தான் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments