Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ரவீந்திரன்.. நீ ரவிச்சந்திரன்.. என்னமா தமிழ் பேசுறாரு ஜட்டு! – அஸ்வினை வாழ்த்தி வீடியோ வெளியிட்ட ஜடேஜா!

Prasanth Karthick
ஞாயிறு, 17 மார்ச் 2024 (11:19 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை வந்துள்ள ரவீந்திர ஜடேஜா 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வினை வாழ்த்தி தமிழில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.



இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்கும் நிலையில் முதல் போட்டியே நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்த போட்டிக்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவும் தற்போது சென்னை வந்தடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் அஸ்வின் 100 டெஸ்ட் தொடர்களை தாண்டியது குறித்து வாழ்த்து தெரிவித்து தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜடேஜா.

ALSO READ: WPL 2024: இந்த தடவையாவது நிறைவேறுமா ஆர்சிபியின் கோப்பை கனவு! – இன்று டெல்லி அணியுடன் இறுதி மோதல்!

அதில் “நான் ரவீந்திரன்.. நீ ரவிச்சந்திரன்! மீசை வெச்சா இந்திரன், மீசை வெக்கலைனா சந்திரன். அஸ்வின் அண்ணா.. நீங்கள் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்துள்ளதற்கு வாழ்த்துகள். நீங்கள் சொன்ன ஐடியாக்களை பின்பற்றி நானும் சில விக்கெட்டுகளை வீழ்த்தினேன். நீங்கள் இன்னும் பல போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்” என கூறியுள்ளார். வீடியோவின் இறுதியில் ’நல்லாருக்க ஆஷ்.. ரொம்ப நல்லாருக்க..” என்று உற்சாகமாக கத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

எனக்கு 10க்கு 7 மதிப்பெண்தான் கொடுப்பேன்- ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

ஹர்திக் பாண்ட்யாவால் எனக்கு கூடுதல் அனுகூலம் கிடைத்துள்ளது.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஐசிசி தலையீட்டால் இறங்கி வந்த பிசிசிஐ… ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்க சம்மதம்!

மூன்றே ஆண்டுகளில் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments