Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓய்வு பெறுகிறாரா கிரிக்கெட் உலகின் ’ஏலியன்ஸ்’ டி வில்லியர்ஸ்?

ஓய்வு பெறுகிறாரா கிரிக்கெட் உலகின் ’ஏலியன்ஸ்’ டி வில்லியர்ஸ்?
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (14:26 IST)
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற உள்ளதாக வெளியான தகவலை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் மறுத்துள்ளார்.


 

முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வந்த தென் ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ், கடந்த சில மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். மேலும், டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதனையடுத்து, கடந்த சில தினங்களாகவே அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள வானொலி நிலையம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவில்லை, எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறவில்லை. இது உறுதி” என்று கூறியுள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகும் வண்ணம், தனது உடற்தகுதியை தற்காத்துக் கொள்வதாகவும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு நாள் போட்டிக்கான களத்தில் தவிக்கும் அஷ்வின்!!