Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா, பாகிஸ்தானுக்கு வந்து ஆடாவிட்டால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது – பாகிஸ்தான் பவுலர் கோபம்!

vinoth
திங்கள், 22 ஜூலை 2024 (09:50 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால் இந்த விஷயத்தில் ஐசிசி, பிசிசிஐ பக்கம்தான் நிற்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்தியா இல்லையென்றால் அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால் ரகசியமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி  தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடியது. அதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடதான் வேண்டும். இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவே விரும்புகிறார்கள். சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படவேண்டும். இந்தியா வந்து பங்கேற்கவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments