Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே முதல்ல ‘தல’ தோனி ரசிகன்.. அப்புறம்தான் இந்த கேப்டன்லாம்! – ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (12:32 IST)
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் அணிகள் இடையே குவாலிஃபயர் போட்டி நடைபெற உள்ள நிலையில் தோனி குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.



பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகள் முடிந்து ப்ளே ஆப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் குவாலிஃபயர் போட்டியில் சிஎஸ்கே அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதே கிடையாது என்ற நிலையில் இன்று சிஎஸ்கே வரலாற்றை மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து பேசியுள்ள குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “மகேந்திர சிங் தோனி ரொம்பவும் சீரியஸானவர் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நான் அவரிடம் நிறைய ஜோக் சொல்லி விளையாடுவேன்.அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமல்ல, சகோதரரும் கூட. அவரது செயல்கள் மூலமாக பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். எப்போதுமே நான் தோனி ரசிகனாகதான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments