Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான தகவல்!

vinoth
திங்கள், 2 செப்டம்பர் 2024 (17:05 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சொந்த அணி ரசிகர்களாலேயே கேலி செய்யப்பட்ட வீரராக ஹர்திக் பாண்ட்யா இருந்தார். அவர் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்குக் கேப்டனாக்கப் பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது. ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் அவரைக் கடுமையாக கேலி செய்ய தொடங்கினர். அவர் டாஸ் போட வரும்போது கூட ரசிகர்கள் அவரை கூச்சல் போட்டு அவமானப்படுத்தினர். ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் அனைத்தும் தலைகீழாக மாறியது.

இந்நிலையில் அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பலக் குழப்பங்கள் ஏற்படும் என்றும் முன்னணி வீரர்கள் பலர் சிதற வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோர் வேறு அணிகளுக்கு செல்லவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் ஹர்திக் ஏலத்தில் கழட்டிவிடப்படுவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஹர்திக்தான் அடுத்த சீசனிலும் மும்பை அணிக்குக் கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments