Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுத்தமாக சொதப்பிவிட்டோம்… தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (08:37 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  கடந்த 3ஆம் தேதி நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியிலும் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் சேர்த்தது.பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “உண்மையை சொன்னால் நாங்கள் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை. நாங்கள் 160-170 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். நிக்கோலஸ் பூரன் அதிரடியாக பேட் செய்த விதத்தால் நாங்கள் பவுலர்களை சரியாக பயன்படுத்த முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும். திலக் வர்மா சிறப்பாக பேட் செய்தார். அவர் ஆடிய விதம் 2 சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடியவரை போல இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments