Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணிக்கு ஸ்டம்புகளுக்கு பின்னால் ஒருவர் இருக்கிறார்… அவர்தான் எல்லாத்துக்கும் காரணம்- தோல்விக்குப் பின்னர் ஹர்திக் பேச்சு!

vinoth
திங்கள், 15 ஏப்ரல் 2024 (10:42 IST)
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சி எஸ் கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் போட்டி நடைபெற்றது.  இந்த சீசனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இது அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த சி எஸ் கே அணி 206 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் ஷிவம் துபே(66), கேப்டன் ருத்துராஜ் (69) என அரைசதம் அடித்து கலக்க, கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 4 பந்துகளில் 20 ரன்களை சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா கடைசி வரை நின்று சதமடித்த போதும் அந்த அணியால் 186 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ”என்ன செய்யவேண்டும் என்பதை சொல்வதற்கு சி எஸ் கே அணிக்கு ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஒரு நபர் இருக்கிறார். அது அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது.  அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்கள். திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தினர்.  பதினரா அபாரமாக பந்துவீசினார்” என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments