Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

vinoth
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (13:10 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் இந்த சீசனில் அந்த அணி ப்ளே ஆஃப் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக அந்தணியின் முன்னாள் வீரர்களே விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் சி எஸ் கே அணிக்காக சில சீசன்கள் விளையாடிய ஹர்பஜன் சிங் அந்த அணியில் தன்னுடைய சக வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா பற்றி பேசியுள்ள கருத்துக் கவனம் பெற்றுள்ளது. அதில் “சுரேஷ் ரெய்னா எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஓய்வு பெற்றுவிட்டார். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அவர் 15 ஆண்டுகள் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால் சி எஸ் கே நிர்வாகம் அவருக்குக் கைகொடுக்கவில்லை” என வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

சி எஸ் கே அணிக்கும் ரெய்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் வெகு சீக்கிரமாகவே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments