Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரரை அறிவித்த குஜராத் டைட்டன்ஸ்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (09:30 IST)
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் ஏலத்தில் அவர் கலந்துகொண்டார். ஏலத்தின் போது கேன் வில்லியம்சன் பெயர் வாசிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏலத்தொகை உயர்த்தப்படாததால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை வாங்கியது. கடந்த ஆண்டில் அவரது ஏல மதிப்பு ரூ.14 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் பீல்டிங் செய்தபோது, காயமடைந்தார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வில்லியம்சன் தற்போது சிகிச்சைக்குப் பிறகு நியுசிலாந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது அவருக்கு மாற்று வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த தஷுன் ஷனகா, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments