Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தோனி ஊரைச் சேர்ந்த வீரர்.. விபத்தில் சிக்கிய சோகம்!

vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (07:32 IST)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜார்கண்ட வீரர் ராபின் மின்ஸ் ஐபிஎல் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை  பெற்றார். இவர் தோனியின் ஊரான ராஞ்சியை சேர்ந்தவர் ஆவார்.

குஜராத் அணியால் ரூ.3.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார் ராபின் மின்ஸ். ரூ.20 லட்சம் அடிப்படை விலை கொண்ட 21 வயதாகும் மின்ஸை எடுக்க, மும்பை குஜராத் இடையே கடும் போட்டி நிலவியது. இவரது தந்தை விமான நிலையத்தில் காவலாளியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் இப்போது ராபின் மின்ஸ் இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சிக்காக தன்னுடைய பைக்கில் சென்ற அவர் எதிரே வந்த மற்றொரு இருசக்கரவாகனத்தில் மோதியுள்ளார். அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு முழங்காலில் அடிபட்டுள்ளதால் அவர் இந்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments