Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி பவுலர்களிடம் சரண்டர் ஆன குஜராத் பேட்ஸ்மேன்கள்.. இந்த சீசனின் மிகக்குறைந்த ஸ்கோர்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (21:24 IST)
ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி இன்று குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி குஜராத் பேட் செய்யவந்த போது ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் அந்த அணி  18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணியில் ரஷீத் கான் அதிகபட்சமாக 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி அணியில் அனைத்து பவுலர்களும் சிறப்பாக பந்துவீசிய நிலையில் முகேஷ் குமார் 3 விக்கெட்களும், இஷாந்த் சர்மா மற்றும் ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்த கலீல் அகமது மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments