இவங்க வொயிட்வாஷ் ஆகாம வந்தாலே பெருசுதான்… ஆஸி முன்னாள் வீரர் காட்டம்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (09:00 IST)
இந்தியாவுக்கு எதிராக ஆஸி அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்தூரில் இன்று நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால் ஆஸி. அணி மேலும் பலவீனமாகியுள்ளது. இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் ஆஸிக்கு திரும்பியுள்ளார். அவரால் மூன்றாவது டெஸ்ட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்த உள்ளார்.

ஆஸி. அணியின் மோசமான செயல்பாடு ஆஸி. முன்னாள் வீரர்களையே கோபப்படுத்தியுள்ளது. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் “ஆஸி அணியின் வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக ஒரு திட்டமே இல்லாமல் விளையாடி வருகின்றனர். ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்வது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. இந்த தொடரில் வொயிட் வாஷ் ஆகாமல் அவர்கள் நாட்டுக்கு திரும்பினாலே அது பெரிய சாதனைதான்” என மிகவும் கோபமாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments