Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த அணியை வச்சிகிட்டு இந்தியா B அணியைக் கூட ஜெயிக்க முடியாது… பாகிஸ்தானைக் கலாய்த்த இந்திய ஜாம்பவான்!

vinoth
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (15:31 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் அணியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் இந்திய முன்னாள் வீரர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. அஜய் ஜடேஜா மற்றும் கவாஸ்கர் உள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கவாஸ்கர் “ இந்த பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே நிச்சயமாக வென்றுவிடும். ஏன் பாகிஸ்தானில் திறமையான வீரர்கள் இப்போது இல்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போல பாகிஸ்தானிலும் டி 20 லீக் உள்ளது.இருந்தும் ஏன் இந்தியா போல அவர்களிடம் திறமையான வீரர்கள் இல்லை என்பது தெரியவில்லை. கண்டிப்பாக இது குறித்து பாகிஸ்தான் ஆய்வு செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments