Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீரின் விமர்சனத்தைப் பொய்யாக்கிய கே எல் ராகுல்… இப்ப என்ன சொல்றாரு பாருங்க?

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:03 IST)
ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இதன் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். போட்டிக்கு முன்னதாக அவரை அணியில் எடுக்க வேண்டாம் எனக் கூறிய கவுதம் கம்பீரின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார்.

போட்டிக்கு முன்னதாக பேசிய கம்பீர் “கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அவரை அணியில் இணைக்க, இஷான் கிஷானை நீக்கிவிடக் கூடாது. இஷான் கிஷான் தான் அணியில் இருக்க வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். அணிக்குள் திறமையான ஒரு வீரரா அல்லது மூத்த வீரரா என்பதை அணிதான் முடிவு செய்யவேண்டும். ” என இஷான் கிஷானுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று ராகுலின் பேட்டிங்கின் போது கமெண்ட்ரி செய்த கம்பீர் பேசும்போது “நாம் ஒவ்வொரு போட்டியின் போது கே எல் ராகுலை விமர்சிக்கக் கூடாது. அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளார். அவர் உலகக் கோப்பைக்கான திட்டத்தோடு இருக்கிறார் என்றால் அவரை எல்லா போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments