ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது: கங்குலி சாடல்...

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (18:23 IST)
போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அனி வீரர்கள் செய்தது முட்டாள்தனம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து கங்குலி மேலும் கூறியதாவது, 1981 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்காக கடைசி பந்தை உருட்டி விட்டது முதல் ஆஸ்திரேலியா அணி இப்படித்தான்  கிரிக்கெட் விளையாடி வருகிறது.
 
2008-ல் நான் 60 ரன்களில் பேட் செய்து கொண்டிருந்த போது ரிக்கி பாண்டிங் தரையில் பட்டு வந்த பந்தை கேட்ச் பிடித்து அவுட் என்று சாதித்தார். நான் அவுட் ஆனவுடன் போட்டியின் போக்கே மாறிவிட்டது.
 
எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதுதான் இப்படி முட்டாள்தனமாக யோசிக்க தூண்டுகிறது. ஸ்மித் இதனை செய்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஸ்மித், பேங்க்ராப்ட், வார்னர் செய்தது மிகப்பெரிய முட்டாள்தனம். உண்மையில் ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது. 
 
ஸ்மித், பேங்கிராப்டுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். 6 மாதகாலம் அல்லது ஆயுள் தடை என்றெல்லாம் நான் கூற மாட்டேன், ஆனால் 2-3 போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும் என கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments