Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் மூன்று கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும்- கம்பீர் ஆசை!

vinoth
வியாழன், 30 மே 2024 (08:52 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனால் அவர் தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார். அவர் வந்த பின்னர் அந்த அணி புத்துணர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் இறுதியோடு முடிவடைகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐயின் லிஸ்ட்டில் கவுதம் கம்பீரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கம்பீர் தற்போது கொல்கத்தா அணி பற்றி பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அவர் “கொல்கத்தா அணி இன்னும் மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும் என்பதே என் ஆசை” என்க கூறியுள்ளார். இதனால் அவர் இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments