Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

vinoth
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (12:09 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 181 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து நான்கு ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 162 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் இந்திய அணியில் நடக்கவுள்ள மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் “அணியில் என்னன்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இப்போதே பேசுவது சீக்கிரமானது. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. இதனால் அணியில் மாற்றங்கள் நடக்கலாம். எது நடந்தாலும் அணியின் நன்மைக்காகவே இருக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments