Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

vinoth
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (13:21 IST)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 376 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்ப அஸ்வினும் ஜடேஜாவும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 7 ஆவது விக்கெட்டுக்கு 226 ரன்கள் சேர்த்தது குறித்து கம்பீர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள கம்பீர் ‘நீண்ட நாட்களாக நம் அணியில் கபில்தேவ் போல வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் இல்லை என நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்வின், அக்ஸர் மற்றும் ஜடேஜா போல சுழல்பந்து ஆல்ரவுண்டர்கள் வேறு எந்த அணியிலும் இல்லை. இதனை ஏன் யாரும் பெரிதாகப் பார்க்கவில்லை என தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments