என்ன கோலிக்கு தொடர்நாயகன் விருது கொடுத்துட்டாங்க… கம்பீர் பரிந்துரைக்கும் மற்றொரு வீரர்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (15:14 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய கோலிக்கு தொடர்நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். அதில் “முகமது சிராஜ் இந்த தொடர் முழுவதும் சிராஜ் முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு தனியாக கொடுக்காவிட்டாலும், கோலியுடன் சேர்த்தாவது அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் இது புரிந்து கொள்ள கூடியதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெஸ்ட் இண்டீஸ் தொடர்… பண்ட், கருண் வெளியே… துருவ் ஜுரெல் உள்ளே!

அவுட்டே இல்லை, நடுவர் முடிவு தவறு.. புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்..!

அரிய வாய்ப்பை மிஸ் செய்த சஞ்சு சாம்சன்.. அணியில் இருந்து நீக்கமா? பும்ரா நிலை என்ன?

ஓய்வு முடிவைத் திரும்ப பெற்ற டிகாக்… மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடிவு!

சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் முன்னெடுப்பு! - மத்திய அமைச்சர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments