Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

vinoth
வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:28 IST)
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர், தற்போது இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இந்திய கிரிக்கெட்டின் வீரர்களான தோனி மற்றும் கோலி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டாக பார்க்கப்படாமல், தனிநபர் சாகசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் பேசிவந்தார்.

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரின் போதே இருவரும் கைகொடுத்துப் பேசி சமாதானம் ஆனார்கள். மேலும் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது “எங்களுக்கு இடையிலான உறவை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார். இந்நிலையில் நாளை வங்கதேச டெஸ்ட் தொடர் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ ஒன்றை எடுத்து பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவின் ஒரு பகுதியில் கம்பீர் கோலி பற்றி பேசும்போது “பாகிஸ்தான் அணிக்கு எதிராக நீங்கள் அடித்த 183 ரன்கள் இன்னிங்ஸ், இந்தியர் ஒருவரின் மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என்பேன். ஏனென்றால் 300 ரன்களை துரத்தி வெற்றி பெறுவது என்பது எப்போதும் கடினமான ஒன்று. அதுவும் பாகிஸ்தான் போன்ற அணியோடு அதை செய்வது எளிதானது இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments