Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை விட்டு விலகும் கௌதம் கம்பீர்!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (08:17 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது பெரிய சர்ச்சையானது. தொடர்ந்து இதுபோல சர்ச்சைகளில் சிக்கி வருவதால் கம்பீர் ஒரு கோபமானவர் என்ற அடையாளமே அவர் மேல் இருக்கிறது.

இந்நிலையில்  இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments