Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை கேப்டன்கள் வந்தாலும் தோனிக்கு நிகர் இல்லை… புகழ்ந்து தள்ளிய கம்பீர்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (07:14 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அவர் பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற அவர் “தோனி மட்டுமே உலகக் கோப்பையை வெல்லவில்லை ஒட்டுமொத்த இந்திய அணிதான் வென்றது. தனிநபர்களைக் கொண்டாடும் போக்கு இந்தியாவில் அதிகமாக உள்ளது” என பலமுறைக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தோனியின் கேப்டன்சியைப் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “இந்திய கிரிக்கெட்டில் தோனியின் கேப்டன்சி சாதனைகளை யாராலும் ஈடு செய்ய முடியாது. பல கேப்டன்கள் வந்துள்ளார்கள். இன்னும் பல கேப்டன்கள் வருவார்கள். ஆனால் அவரை ஈடு செய்யமுடியுமா என தெரியவில்லை. தோனி 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். இதைவிட பெரிய சாதனை எதுவும் இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

நைட் வாட்ச்மேனை பலிகொடுத்த கே எல் ராகுல்… சரியா தவறா?- ரசிகர்கள் காரசார விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments