Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்பு கிரிக்கெட்: உசைன் போல்ட் அணி வெற்றி

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2014 (10:09 IST)
உலகின் மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட்டும், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் மோதும் நட்பு கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.


 
 
உசேன் போல்ட் தலைமையில் ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையில் ஒரு அணியும் மோதின. இவ்விரு அணிகளிலும் 7 வீரர்கள் பங்கேற்றனர். பேட்டிங்கின் போது உசைன் போல்ட், யுவராஜ் சிங் ஆட்டமிழந்தால் பெவிலியன் செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக 4 ரன்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் முதலில் ஆடிய யுவராஜ் சிங் அணி 58 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த உசேன் போல்ட்டின் அணிக்கு கடைசி இரு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சிக்சர்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை உறுதிச் செய்தார் உசேன் போல்ட்.
 
பின், 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது. இதில் யுவராஜ் சிங்  வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments