Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லின் அதிரடியைத் தாக்குப் பிடிக்குமா நியூசிலாந்து? அரையிறுதிக்குள் நுழைவது யார்?

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2015 (19:01 IST)
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் கெய்லின் அதிரடியை நியூசிலாந்து அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?
 
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டியின் நான்காவது மற்றும் கடைசி ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் சனிக்கிழமை [21-03-15] அன்று நடக்கிறது. இதில் ’ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து- ’பி’ பிரிவில் 4-வது இடத்தை பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
 

 
அணி வீரர்கள்:
 
நியூசிலாந்து:
பிரண்டன் மெக்கல்லம் (கே), ட்ரெண்ட் போல்ட், கிராண்ட் எல்லியாட், டாம் லாதம், மார்டின் கப்தில், மிட்செல் மெக்லெனகன், நாதன் மெக்கல்லம், கெய்ல் மில்ஸ், ஆடம் மில்னே, டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லூக் ரோஞ்சி, டிம் சவுத்தி
 
வெஸ்ட்இண்டீஸ்:
ஜான்சன் ஹோல்டர் (கே), மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், ஜோனாதன் கார்ட்டர், ஷெல்டான் காட்ரெல், கிறிஸ் கெய்ல், தினேஷ் ராம்தின், கேமர் ரோச், ஆண்ட்ரே ரஸ்ஸல், டேரன் சேமி, லெண்டில் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர், நிகிதா மில்லர், ஜான்சன் சார்லஸ்
 
அணிகள் நிலவரம்:
 
நியூசிலாந்து:
இந்த உலகக்கோப்பை நியூசிலாந்து அணியில் 6 ஆட்டங்களில் விளையாடி மார்டின் கப்தில் 261, பிரண்டன் மெக்கல்லம் 257, கேன் வில்லியம்சன் 183 ரன்களும் எடுத்துள்ளனர். 5 ஆட்டங்களில் விளையாடி கோரி ஆண்டர்சன் 158 ரன்கள் குவித்து ரன் குவிப்பில் வலுவாக உள்ளனர்.
 
அதுபோல பந்துவீச்சிலும் 6 ஆட்டங்களில் விளையாடி ட்ரெண்ட் போல்ட் 15, டேனியல் வெட்டோரி, டிம் சவுதி ஆகியோர் தலா 13 விக்கெட்டுகளும், கோரி ஆண்டர்சன் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டுகின்றனர்.
 
வெஸ்ட் இண்டீஸ்:
 
இந்த உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இரட்டைச் சதம் உட்பட 279, மார்லன் சாமுவேல்ஸ் 203 ரன்கள் எடுத்துள்ளனர். மேலும் ஹோல்டர், சிம்மண்ஸ், டேரன் சமி ஆகியோர் மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
 
அதுபோல பந்துவீச்சில் டெய்லர் 14, ஹோல்டர் 9, ரஸ்ஸல் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அது தவிர கெய்ல், சாமுவேல்ஸ், ஸ்மித் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டால் ஜொலிக்கலாம்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

மேலும் சில:
 
நியூசிலாந்து கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன பிரண்டன் மெக்கல்லம் நிச்சமாக வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார். இது தவிர டெய்லர், வில்லியம்சன், கப்தில் அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
 

 
உலகக்கோப்பை தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி ஒன்றில்கூட தோல்வி அடையாமல் காலிறுதிச் சுற்றை எட்டியுள்ளனர். மேலும் நியூசிலாந்து தனது சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் சாதகமான அம்சமாகும்.
 
வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்லை தவிர இதுவரையில் எவரும் தங்களது முழுத்திறமையை வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம். கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரராக களமிறங்குவார். அவர் நிலைத்துநின்று ஆட ஆரம்பித்து விட்டால் பிறகு ரசிகர்கள் வானவேடிக்கையை பார்க்கலாம்.
 

 
அந்த அணியின் ஆல் ரவுண்டர் டேரன் சமி, சாமுவேல்ஸ் மற்றும் டுவைன் ஸ்மித் ஆகியோர் இன்னும் சரியாக செயல்படவில்லை. அதுபோல சிறந்த ஓப்பனிங் பாட்னர்ஷிப் அமையாததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரையன் லாரா கூட சரியான பாட்னர்ஷிப் அமையாதது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
 
உலகக்கோப்பை தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியுற்று தட்டுத்தடுமாறி வந்துள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர்கள் திடீரென்று வீறுகொண்டு எழுந்து அனைவரைக்கும் பிரமிக்க வைப்பதுதான் அவர்களது சிறப்பம்சம்.
 
முதல் இரண்டு உலககோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்றது கிடையாது என்பது அதன் பலவீனமாகும். அந்த குறையை தீர்க்க வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடுமையாக முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
 
நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப்போட்டியில் வெல்லும் அணி அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கும். இந்த ஆட்டம் வருகிற 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

Show comments