Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை டி20 கிரிக்கெட்டில் 5 அறிமுக வீரர்கள்

இலங்கை டி20 கிரிக்கெட்டில் 5 அறிமுக வீரர்கள்
, வியாழன், 23 ஜூலை 2015 (15:47 IST)
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த 5 புதுமுக வீரர்கள் அறிமுகப்படுத்தபடவுள்ளனர்.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வென்று அசத்தியது. தற்போது இரு அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இடைத்தொடர்ந்து இரு அணிகளும் டி20 போட்டியிலும் மோதவுள்ளது. 
 
இந்நிலையில் இப்போட்டி தொடரில் பங்குபெறும் இலங்கை வீரர்களின் பட்டியலில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் பட்டியலில் 5 புதுமுக வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
வீரர்களின் விவரம் - மலிங்கா, தில்ஷன், பெரேரா, கித்ருவான் விதனாகே, தனஞ்ஜய டி சில்வா, மேத்யூஸ், தசுன் ஷனாகே, கபுகேதரா, ஷேகன் ஜெயசூர்யா, ஜெப்ரே வந்தேர்சாய், நுவான் குலசேகரா, பினுரா பெர்னாண்டோ, சுதுரங்கா டி சில்வா, மலிந்தா சிறிசர்தேனே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil