ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கலாமா? ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஸ்மா சுவராஜ்

Webdunia
சனி, 26 மே 2018 (21:16 IST)
டுவிட்டரின் ரசிகர்கள் ஆப்கான் வீரர் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாமா என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பதிலளித்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரில் எல்லோரும் கவனத்தையும் ஈர்த்த ஒரே அணி ஹைதராபாத். இந்த அணியின் பந்துவீச்சுக்கு சென்னை அணியை தவிர மற்ற எல்லா அணிகளும் அடிபணிந்தது. குறிப்பாக ஆப்கான் வீரர் ரஷித்கான் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
 
இவரது பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் எல்லா வீரர்கள் திணறியது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் முக்கியமான தருணத்தில் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
 
இதனால் இந்தியாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலாமே உருவாகி உள்ளது. இந்நிலையில் டுவிட்டரின் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ரஷித் கானுக்கு இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று டுவிட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், மோடி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை டேக் செய்து ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாமா என்று கேட்டுள்ளார்.
 
இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பதில் டுவீட் செய்துள்ளார். அதில், எல்லா டுவீட்டுகளையும் பார்த்தேன். இதை உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments