“தவானுடைய கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடியக் கூடாது…” - முன்னாள் வீரர் ஆதரவு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:44 IST)
இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் இடம்பெறவில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இஷான் கிஷான் சமீபத்தில் சிறப்பாக விளையாடியது காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்காக பல வெளிநாட்டு தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள தவான் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரையாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிசிசிஐ எடுத்துள்ள முடிவு அநியாயமானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் தொட்டா கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “ அவரது கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வரக்கூடாது. பிசிசிஐ இப்படி செய்திருப்பது அநியாயமானது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

ஐசிசி தலைவர் பொறுப்பில் இப்போது கங்குலிதான் இருந்திருக்க வேண்டும்… மம்தா பானர்ஜி பேச்சு!

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்த குயிண்ட்டன் டிகாக்!

மீண்டும் தொடங்கிய சஞ்சு –ஜடேஜா ட்ரேட் பேச்சுவார்த்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments