Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திணறும் இங்கிலாந்து அணி: கூட்டணியை உடைத்து முன்னேறும் இந்தியா!

திணறும் இங்கிலாந்து அணி: கூட்டணியை உடைத்து முன்னேறும் இந்தியா!

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (11:51 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.


 
 
இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி 167 ரன்னும், புஜாரா 119 ரன்னும், அஸ்வின் 58 ரன்னும் குவித்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன் எடுத்திருந்த போது அந்த அணியின் கேப்டன் குக் சமி வீசிய பந்தில் ஸ்டெம்ப் உடைய விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
 
அதன் பின்னர் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 103 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் மற்றும் பெர்ஸ்டௌ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரை சதம் அடித்தனர்.
 
இந்த கூட்டணியை உடைக்க இந்திய பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். இறுதியில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் பெர்ஸ்டௌ விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 191 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ள இங்கிலாந்து அணி ஃபாலோ-ஆனை தவிர்க கடுமையாக போராடி வருகிறது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments