Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் தோல்விகளுக்கு டாஸ் ஒரு முக்கியக் காரணம்… இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (07:20 IST)
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது.

உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறிவிட்ட இங்கிலாந்து அணி நேற்று நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தங்கள் தோல்விகளுக்கு டாஸும் ஒரு முக்கியக் காரணம் எனக் கூறியுள்ளார்.

அவரது பேச்சில் “இந்த தொடரில் நாங்கள் மோசமாக விளையாடினோம். உலகக் கோப்பையில் விளையாடுகிறோம் என்ற நெருக்கடி காரணமாக இது நடந்திருக்கலாம்.  ஆட்டத்தில் சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் வீரர்கள் விளையாட வேண்டும். இந்த போட்டியில் அதை பென் ஸ்டோக்ஸ் செய்திருக்கிறார். இந்த தொடரில் டாஸ் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments