Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகல்-இரவு டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை 58 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (16:30 IST)
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில்  நடைபெற்று வரும் பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 58 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து அணி.
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கியது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீக்கெட்டுகளை நியூசிலாந்து பவுலர்கள் சீட்டுகட்டுகளை போல சரித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20.4 ஒவர்களில் 58 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக போல்ட் 6 வீக்கெட்டுகளையும், சவுத்தி 4 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 
 
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 வீக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 58 ரன்கள் எடுத்து தனது 6-வது குறைந்தபட்ச ஸ்கொரை பதிவு செய்துள்ளது. இதே மைதானத்தில் 1995-ம் ஆண்டு இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை 28 ரன்களை சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments