Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆவது உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்: பிளட்சர்

Webdunia
சனி, 17 ஜனவரி 2015 (13:28 IST)
வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி மீண்டும் வெல்லும் என பி.சி.சி.ஐ இணைய தளத்துக்கு டங்கன் பிளட்சர் பேட்டியளித்துள்ளார்.
 
11 ஆவது உலகக்கோப்பை போட்டிகள் வரும் பிப், 14 முதல் நடைபெறவுள்ளது. இப்போட்டி தொடருக்கான அணிகளை அனைத்தும் நாடுகளும் அறிவித்துவிட்ட நிலையில், போட்டிகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் பி.சி.சி.ஐ இணைய தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். போட்டிகுறித்து பிளட்சர் கூறுகையில், இந்திய அணிக்கு நான் பயிற்சியாளராக பங்கேற்கும் 3 ஆவது உலக கோப்பை தொடர் இதுவாகும். மேலும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது. மேலும் 2013 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளோம். ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாடுகிறார்கள். மேலும் தோனியின் அணுகுமுறையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய வீரர்கள் நெருக்கடிகளை தகர்த்து மீண்டும் கோப்பையை தக்க வைத்துக் கொள்வர் என கூறினார்.

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

Show comments