முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி… ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக்!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (09:11 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில் நேற்று டி 20 தொடர் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்களை சேர்த்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் சேர்க்க, தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பவுலர்களின் சுழலில் சிக்கி 8 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments