“ரிஷப் பண்ட்டின் மீள்வருகை சாதாரணமானது இல்லை…” தினேஷ் கார்த்திக் பாராட்டு!

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (07:55 IST)
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து இப்போது உலகக் கோப்பை தொடரில் தேர்வாகியுள்ள அவர் பயிற்சி ஆட்டத்திலும் முதல் போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அணியில் அவரது பேட்டிங் வரிசையும் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். அவர், “ஒரு மோசமான விபத்தில் இருந்து மீண்டுவருவது சாதாரணமானது இல்லை. சாதாரண தினசரி வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலை அவரை விரக்தியடைய வைத்திருக்கும்.  அந்த நிலையைக் கடின உழைப்பாலும் மன வலிமையாலும் மீண்டு வந்துள்ளார். அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியை வெல்ல உதவுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments