Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் 42 வது பிறந்தநாள்... பிரமாண்ட கட்- அவுட் வைத்த ரசிகர்கள்..வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (13:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர், ஒருநாள், டி20, சாம்பியன் கோப்பை ஆகிய முத்தரப்பு கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டன் ஆவார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறித்தார்.

தற்போது, ஐபிஎல் –போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

சமீபத்தில்  நடைபெற்ற ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் இறுதிப் போட்டி  குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில்,  குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வென்று   5வது முறையாக  சேம்பியன் கோப்பை வென்றது.

இந்த நிலையில், இன்று தோனியின் 42 வது பிறந்த  நாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தோனியின் 42 வது பிறந்த நாளை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ரசிகர்கள் 52 அடியில் தோனிக்கு கட் அவுட் வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments