Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு சிறந்த ஆசிய சாதனையாளர் விருது!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2014 (14:10 IST)
ஐசிசி உலகக் கோப்பை இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் காரணமாகவும், இந்திய அணியின் சாதனைகளுக்கு காரணமாக இருந்ததற்காகவும் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு 2014ஆம் ஆண்டுக்கான ஆசியன் அவுட்ஸ்டான்டிங் அச்சீவ்மென்ட் விருது வழங்கப்பட்டது.
லண்டனில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ராம் பிரகாஷ், தோனிக்கு இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்.
 
தோனியின் தலைமையில் இந்தியா 2007 T20 உலகக் கோப்பை கிரிக்கெட், ஆஸ்ட்ரேலியாவில் நடந்த 2007- 08 சி.பி. சீரீஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடர், 2010 ஆசியக் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்றுள்ளதால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments