Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

vinoth
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:17 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனாலும் ‘எந்தப் பயனும் இல்லை’ என ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

தற்போதுள்ள இருக்கும் நிலையில் இனிமேல் இந்த சீசனில் சி எஸ் கே அணிப் ப்ளே ஆஃப் செல்வது என்பது குதிரைக் கொம்புதான். ஆனால் சென்ற ஆண்டில் இதே போன்ற ஒரு நிலையில் இருந்துதான் ஆர் சி பி அடுத்தடுத்து ஆறு போட்டிகளை வென்று ப்ளே ஆஃப்க்கு சென்றது. அதனால் சென்னை அணியும் அது போல் கம்பேக் கொடுக்கும் எனப் பயிற்சியாளர் பிளமிங் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தோனி விளையாடும் 400 ஆவது டி 20 கிரிக்கெட் போட்டியாகும். இதற்கு முன்னர் இந்த மைல்கல்லை எட்டிய இந்தியர்களாக ரோஹித் ஷர்மா (456), தினேஷ் கார்த்திக் (412) மற்றும் கோலி (407) ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் தேர்வாகவில்லை: அஜித் அகர்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments