Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்திய அணிக்கு தலைமையேற்கும் தோனி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (17:38 IST)
துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பைத் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு தோனி தலைமையேற்பு.


இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாகத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த பதவிகளில் இருந்தும் விலகிக் கொண்டு அணியில் சாதாரண வீரராக தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஆசியக்கோப்பைக்கான தொடரில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய அணி தற்போது இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்று விட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டதால் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றிருக்கிறார். இது தோனி தலையேற்கும் 200 வது ஒருநாள் போட்டியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments