Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: தோனி பங்கேற்பு

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: தோனி பங்கேற்பு
, வியாழன், 4 டிசம்பர் 2014 (13:18 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் தோனி விளையாடவுள்ளார்.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் கேப்டன் தோனி காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே முதல் டெஸ்ட் போட்டியை தற்காலிக கேப்டன் கோலி வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் உயிரிழந்ததால், டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேப்டன் தோனி முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால், வருகிற 9 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil