Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங்… ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கவைத்த தோனி!

vinoth
சனி, 29 மார்ச் 2025 (08:24 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருத்துராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி பேட் செய்ய வந்த ஆர் சி பி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 196 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் பில் சால்ட், கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் கணிசமான ரன்களை அடிக்க, ரஜத் படிதார் அரைசதம் அடித்துக் கலக்கினார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் ஆடிய சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே சேர்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த அணியில் தோனி பேட்டிங்கில் 30 ரன்கள் சேர்த்தார். அதே போல அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஆர் சி பி அணி வீரர் பில் சால்ட்டை மின்னல் வேக ஸ்டம்பிங் ஒன்று செய்து வெளியேற்றினார். இந்த ஸ்டம்பிங்குக்கான அவரது ரியாக்‌ஷன் நேரம் 0.16 வினாடிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments