Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா வேண்டும்… அணி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் தோனி?

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:02 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் சில போட்டிகளில் கேப்டனாக ஜடேஜா பணிபுரிந்தார் என்பதும் அவரது கேப்டன்ஷிப் திருப்தி இல்லாததால் மீண்டும் தோனி கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் ஜடேஜாவை விடுத்து வேறு வீரர்களை மாற்றிக்கொள்ள சில அணிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான தொடருக்கு அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ல வீரர்களின் பட்டியலை இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். அதன் பின்னர் மினி ஏலம் நடக்கும். இந்நிலையில் சென்னை அணி ஜடேஜாவை விடுவிக்க விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

அதற்குக் காரணம் சி எஸ் கே அணியின் கேப்டன் தோனியின் அழுத்தம்தான் என்று தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

ஒரு சீசனில் அதிக தோல்விகள்… சி எஸ் கே படைத்த மோசமான சாதனை!

விராட் கோலிக்குப் பின் அவர் பேட்டிங்கைதான் ரசித்துப் பார்க்கிறேன் – சேவாக் சிலாகிப்பு!

ஆறுதல் வெற்றி கூட இல்லை.. சிஎஸ்கேவுக்கு இன்னொரு தோல்வி..!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments