Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் தோனிதான்… மூத்த வீரர் கருத்து!

vinoth
செவ்வாய், 19 மார்ச் 2024 (14:24 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் சி எஸ் கே உள்ளிட்ட 10 அணிகளும் தயாராகி வருகின்றனர். சி எஸ் கே அணிக்காக ஐந்துமுறைக் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் சீசனின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்குகிறார்

தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சீசனில் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். அதனால் அவரால் அதிக நேரம் பேட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. எல்லா இன்னிங்ஸ்களிலும் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இந்நிலையில் இந்த சீசன்தான் தோனி கடைசி சீசனாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோனியின் கீழ் சி எஸ் கே அணிக்காக சில சீசன்கள் விளையாடிய ஃபாஃப் டு பிளசிஸ் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் தோனிதான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “சி எஸ் கே அணியில் அவருடன் இருந்த நாட்கள்தான் கேப்டன்சி பொறுப்பில் நான் இப்போது அடைந்துள்ள இடத்துக்கு உதவி செய்தது. அவர்தான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments