Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி அமைதியானவர், ஆனால் அசாதாரணமானவர் - கில்லி

தோனி அமைதியானவர், ஆனால் அசாதாரணமானவர் - கில்லி
, வெள்ளி, 31 அக்டோபர் 2014 (20:16 IST)
தோனி அமைதியானவர். ஆனால் அதே நேரத்தில் அசாதாரணமானவர் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், "தோனியால் நான் கவரப்பட்டிருக்கிறேன் என்று இதற்கு முன்னதாகவே நிறைய முறை சொல்லியிருக்கிறேன். அவர் அற்புதமான அணித் தலைவர். அவர் இந்தியாவிற்காக டி-20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்திருக்கிறார்.

அது தவிர டெஸ்ட் போட்டிகளில் முதன்மையான இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். தோனி அமைதியானவர், ஆனால் அதே நேரத்தில் அசாதாரணமானவர்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil