Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

Prasanth Karthick
புதன், 19 மார்ச் 2025 (11:17 IST)

ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பயிற்சி ஆட்டத்தில் தோனி அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸர் ஷாட் ட்ரெண்டாகி வருகிறது.

 

வரும் 22ம் தேதி முதல் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர். முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். காரணம் வேறு யார் ‘தல’ தோனிதான். இந்த ஐபிஎல் தான் தோனிக்கு கடைசி ஐபிஎல் என பேசிக் கொள்ளப்படும் நிலையில் சமீபத்தில் தோனி மோர்ஸ் கோட் வாக்கியம் அடங்கிய டீசர்ட் அணிந்து வந்தார். அதன் விளக்கம் “ONE LAST TIME” என்றிருந்தது. இதனால் இது அவரது கடைசி போட்டி என சொல்லப்படுவதால் மைதானத்தில் தோனியை பார்க்க வேண்டும், அவரது சிக்ஸரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

 

23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி சில நிமிடங்களிலேயெ டிக்கெட்டுகள் தீர்ந்துள்ளன. சென்னையில் தங்கியுள்ள சிஎஸ்கே அணியினர் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவ்வாறாக பயிற்சி மேற்கொண்டபோது பதிரானா வீசிய பந்தை தனது ட்ரேட்மார்க் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து சிக்ஸருக்கு தள்ளினார் தோனி. இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அதற்கு ரசிகர்கள் ‘நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்’ பாடலை போட்டு Vibe செய்து வருகின்றனர். இந்த சீசனில் சிஎஸ்கேவின் போட்டிகள் தனி கவனம் பெரும் போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

நான் கோப்பையை வென்று அதைக் கோலிக்காக சமர்ப்பிக்க வேண்டும்… இளம் வீரரின் ஆசை!

மீண்டும் அணிக்காக தன்னுடைய பேட்டிங் பொசிஷனை தியாகம் செய்யும் கே எல் ராகுல்!

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிப்பதே இந்த பிரச்சனையால்தான்… ஸ்ரீகாந்த் கருத்து!

வீரர்களின் அதிருப்தியைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த பிசிசிஐ முடிவு…!

அடுத்த கட்டுரையில்
Show comments