Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி, துபே சூப்பர் டக் அவுட்.. சிஎஸ்கே வைத்த சொற்ப இலக்கு! – சேஸிங்கில் இறங்கும் பஞ்சாப்!

Prasanth Karthick
ஞாயிறு, 5 மே 2024 (17:31 IST)
ஐபிஎல்லின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ் போட்டியிட்டு வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி சொற்ப ரன்களையே டார்கெட்டாக வைத்துள்ளது.



டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை எடுக்க பேட்டிங்கில் இறங்கிய சிஎஸ்கேவில் ஆரம்பமே ரஹானே 9 ரன்களில் அவுட் ஆனார். ருதுராஜ் 32 ரன்களும், டேரில் மிட்செல் 30 ரன்களும் அடித்து ஒருவாறு ஆட்டத்தை கொண்டு போக முயன்றபோது கெயிக்வாட் விக்கெட் விழுந்தது. அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் டக் அவுட் ஆனார்.

ஜடேஜா மட்டும் நின்று விளையாடி 43 ரன்கள் வரை சேர்த்து அவுட் ஆனார். ஆனால் அவருக்கு முன்பே வரிசையாக ஒவ்வொருவராக விக்கெட் இழந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். 18.5ல் களமிறங்கிய தோனி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் டக் அவுட் ஆனார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 167 மட்டுமே எடுத்துள்ளது. தற்போது சிஎஸ்கேவில் பதிரனா, முஸ்தபிசுரும் பந்துவீச்சில் இல்லாததால் பஞ்சாபின் ரன்களை எப்படி கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலே ஒழிய இன்று வெற்றிக்கான அதிர்ஷ்டம் பஞ்சாப் அணிக்கு அதிகமாகவே உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments