Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினுக்குப் பிறகு தோனிதான்! இந்திய அணியில் வேறு யாருக்கும் கிடைக்காத சிறப்பு என்ன தெரியுமா?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (22:19 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணிந்திருந்த எண் 7 ஜெர்சிக்கு ஒய்வு அளித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல. அதற்கும் மேல்.
 
இவ்வளவு வேலை இருந்தாலும் சரி, கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும். அது, உலகக்கோப்பையோ, ஐபிஎல் போட்டியோ, போட்டியின் மீது தான் எப்போதும் ஒரு கண் இருக்கும்.
 
அபாரமாக விளையாடி, மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத்து, வரலாற்றுச் சாதனைகளை படைக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதும் அபரிமிதமான அன்பும் மரியாதையும் இருக்கும். தங்களது பிடித்தமான வீரர்களின் ஹேர் ஸ்டைல் முதல் அவர்களின் ஜெயர்சி எண் வரை அனைத்தையும் அடையாளம் கண்டுகொள்ளும் ரசிகர்கள் இங்கு ஏராளம்.
 
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் அணியும், 7ம் எண் ஜெர்சியை விரும்பி வாங்குபவர்களும் இன்றும் ஏராளம்.
 
இப்படி இருக்கையில், இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில், அவர் அணிந்திருந்த 7ம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.
 
பி.சி.சி.ஐ. அறிவிப்பின் பொருள் என்ன? வீரர்களுக்கு ஜெர்சி எண் ஒதுக்குவது எப்படி? அதை யார் ஒதுக்குவார்கள்? என பல கேள்விகள் நமக்குள் எழும். அவற்றுக்கான பதிலே இந்தக் கட்டுரை.
 
மீண்டும் அதே வாளி! பாதிக்கப்பட்ட மக்களை கொண்டே எண்ணெய் அகற்றம் - எண்ணூரில் என்ன நடக்கிறது?
 
தோனியின் ஜெர்சி எண் 7-க்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், அந்த எண் கொண்ட ஜெர்சியை இனி யாரும் அணிய முடியாது.
 
ஒரு ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளிப்பது என்பது, அந்த ஜெர்சி எண்ணை மற்றொரு வீரரால் தேர்ந்தெடுக்க முடியாது. அதாவது பிசிசிஐயின் சமீபத்திய முடிவால் இந்திய அணியில் எந்த வீரரும் தோனி அணிந்த 7ம் எண் ஜெர்சியை இனி அணிய முடியாது.
 
இதற்கு முன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த 10ம் நம்பர் ஜெர்சிக்கு கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்திருந்தது. தற்போது தோனியின் சேவையை மதித்து இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
 
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிபட மூலாதாரம்,AFP
 
விளையாட்டில் தனித்தன்மையுடன், சிறந்து விளக்கும் வீரர்களுக்கே, இப்படி அவர்களின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளித்து சிறப்பு செய்யப்படுகிறது. பழம்பெரும் வீரர்களுக்கு அவர்கள் அணிந்திருந்த ஜெர்சி எண்களை ஓய்வு கொடுத்து கவுரவிப்பது விளையாட்டு உலகில் வழக்கமாகி வருகிறது.
 
அவ்வாறு ஓய்வு பெற்ற ஜெர்சி எண்கள் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படாது. அந்த எண் கொண்ட ஜெர்சிதான் அந்த வீரர்களின் 'ஐகானிக் ஜெர்சி'யாக நினைவில் நிற்கும்.
 
மாருதி 800: இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கனவு கார் பிறந்த கதை
 
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) விதிகளின்படி - இந்த ஜெர்சி எண்களை ஒதுக்குவதில் குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை. வீரர்கள் 1 முதல் 100 வரை எந்த எண்ணையும் தேர்வு செய்யலாம்.
 
இருப்பினும், அணியில் இருவருக்கு ஒரே ஜெர்சி எண் ஒதுக்கப்படாமல் இருப்பதை ஐசிசி உறுதி செய்கிறது.
 
"ஜெர்சி எண்ணைத் தேர்ந்தெடுப்பதில் இந்திய கிரிக்கெட் சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. தற்போது அணியில் விளையாடும் 60க்கும் மேற்பட்ட ஜெர்சி எண்கள் உள்ளன. ஒரு வீரர் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் அணியில் இருந்து விலகி இருந்தாலும், அவரது ஜெர்சி எண் புதிய வீரருக்கு ஒதுக்கப்படாது. அதாவது புதிய வீரர்கள் தேர்வு செய்ய 30க்கும் மேற்பட்ட ஜெர்சி எண்கள் உள்ளன," என பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
 
"ஒரு வீரர் ஓய்வு பெறும்போது, ​​அந்த ஜெர்சி எண் வேறொருவருக்கு ஒதுக்கப்படும். ஆனால், பழைய வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சி எண்களை நிறுத்தினால், எதிர்காலத்தில் அந்த எண் ஜெர்சியை வேறு யாரும் தேர்வு செய்ய முடியாது" என்று விளையாட்டு ஆய்வாளர் சி.வெங்கடேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
25 நவம்பர் 2014 அன்று, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் உயிரிழந்தார்
 
பிசிசிஐ-யின் வரலாற்றில், இதுவரை இரண்டு ஜெர்சிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த 10ம் எண் ஜெர்சி, மற்றொன்று தோனி அணிந்திருந்த 7ம் எண் ஜெர்சி. அந்த வகையில் சச்சினுக்குப் பிறகு தோனிதான் அந்த சிறப்பைப் பெற்றுள்ளார்.
 
2014 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிலிப் ஹியூஸ் அணிந்திருந்த 64ஆம் எண் ஜெர்சியை ஓய்வு பெறுவதாக அறிவித்தது.
 
25 நவம்பர் 2014 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் செய்யும் போது பிலிப் பலத்த காயம் அடைந்தார்.
 
பந்து வீச்சாளர் சீன் அபோட் வீசிய பவுன்சரை எதிர்கொள்ள முயன்றபோது பந்து தலையில் பட்டதில் பிலிப் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 25 மட்டுமே.
 
பிலிப் ஹியூஸை கவுரவிக்கும் வகையில், அவர் அணிந்திருந்த எண் 64 ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
 
சமீபத்திய உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியின் போது பிலிப்பை நினைவுகூர்ந்து, ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஸ்டார்க் தனது வலது கையில் 'PH' என்ற பட்டையை அணிந்திருந்தார்.
 
2021ல், முன்னாள் கேப்டன் பராஸ் கட்கா அணிந்திருந்த ஜெர்சி எண் 77க்கு ஓய்வு அளிக்க நேபாள அணி முடிவு செய்தது.
 
திருப்பூர்: மூடப்படும் ஆலைகள்; கடும் பாதிப்பில் பின்னலாடை தொழில் - தமிழக அரசுதான் காரணமா?
 
வீரர்கள் தங்களுக்கு விருப்பமான ஜெர்சி எண்ணை தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் அந்த எண்களை தேர்வு செய்வதில் பலர் நியூமராலஜியை பின்பற்றுவதாக விளையாட்டு ஆய்வாளர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
 
"வீரர்கள் பெரும்பாலும் ஒன்பதுகளுடன் வரும் எண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். இந்த ஜெர்சி எண்களைத் தேர்ந்தெடுப்பதில் வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் கேட்கிறார்கள்.
 
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணிந்திருக்கும் ஜெர்சி எண் 45. விராட் கோலி அணிந்திருக்கும் ஜெர்சி எண் 18. இந்த ஜெர்சி எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் நமக்கு 9 கிடைக்கும். மேலும் தோனி தனது ஜெர்சி எண் 7ஐ தேர்வு செய்ததன் பின்னணியில் ஒரு தீம் உள்ளது. தோனி ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். இதனை அங்கீகரிப்பதற்காகவே அந்த ஜெர்சி எண்ணை அவர் தேர்வு செய்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.
 
வீரேந்திர சேவாக் ஜெர்சி எண் 44 ஐ தேர்வு செய்தார். இருப்பினும், ஜெர்சி எண் இல்லாமல், பெயர் கொண்ட ஜெர்சியை மட்டுமே அணிந்து கிரிக்கெட் விளையாடும் வழக்கமும் உள்ளது,'' என்றார் வெங்கடேஷ்.
 
காடு, மலைகள் வழியே 11 நாடுகளைக் கடந்து அமெரிக்கா நோக்கி ஆப்கானியர்கள் பயணம் - ஏன்?
 
கால்பந்தில் ஜெர்சி எண் 10 மிகவும் முக்கியமானது.
 
கால்பந்தில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே பயன்படுத்திய 10 ஆம் எண் ஜெர்சி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதே ரசனை கிரிக்கெட்டிலும் தொடர்கிறது.
 
2017 ஆம் ஆண்டில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த 10 ஆம் எண் ஜெர்சியை ஷர்துல் தாகூர் அணிந்திருந்தார்.
 
அப்போது ஷர்துல் தாகூர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். பிசிசிஐயின் தலையீட்டால் ஷர்துல் ஜெர்சி எண் 54க்கு மாற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

ஏலத்தில் எந்த டீமுக்கு செல்லப் போகிறீர்கள்?... போட்டியின் நடுவே ரிஷப் பண்டிடம் கேள்வி கேட்ட ஆஸி பவுலர்!

இது அவுட்டா…? கே எல் ராகுல் விக்கெட்டால் கிளம்பிய சர்ச்சை!

IND vs AUS Test Series: ஒரு ஆண்டில் அதிக டக் அவுட்கள்.. முதலிடத்தில் இந்தியா! - இப்படி ஒரு மோசமான ரெக்கார்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments