Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுலதான் நான் கிங்கு… 100 முறை நாட் அவுட் ஆகி சாதனை படைத்த தோனி!

vinoth
வியாழன், 8 மே 2025 (08:58 IST)
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் சி எஸ் கே மற்றும் கே கே ஆர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் கே கே ஆர் அணி முதலில் ஆடி 179 ரன்கள் சேர்க்க, அடுத்து ஆடிய சி எஸ் கே அணி 20 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சி எஸ் கே அணியின் மூன்றாவது வெற்றி இதுதான்.

இந்த போட்டியில் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 100 முறை நாட் அவுட்டாக இருந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி.

உலகக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகக் கருதப்படும் தோனியின் தனிச்சிறப்புகளில் ஒன்று கடைசி வரை தன்னுடைய விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை வெற்றிகரமாக எடுத்துச் சென்று முடிப்பது. ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட தன்னுடைய 40 சதவீதம் போட்டிகளில் அவர் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

சில போட்டிகளுக்குப் பிறகா?... இதுதான் எங்கள் மூன்றாவது வெற்றி- தோனி ஜாலி பதில்!

23 நாட்களுக்குப் பிறகு முதல் வெற்றியை ருசித்த சி எஸ் கே…!

பெங்களூர் அணிக்குப் பெரும் பின்னடைவு…காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments