இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 10 மே 2021 (17:08 IST)
பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

தற்போது, ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் பியூவ் சாவ்லாவின் தந்தை கொரொனாவால் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை பியூவ் சால்வா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவருக்கு சக வீரர்களும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய மகளிர் உலகக் கோப்பை வெற்றி: முக்கிய வீராங்கனைக்கு ரூ. 1 கோடி பரிசு!

ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

உலகக்கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோது வீராங்கனை வீட்டில் நடந்த துக்கம்.. தகவலை மறைத்த குடும்பத்தினர்..

டி 20 ஃபார்மட்டுக்கு ‘குட்பை’ சொன்ன கேன் மாமா!

உலகக் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments